அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பல்வேறு சிறப்பம்சங்களுடன் வள்ளுவா் கோட்டம் இன்று திறப்பு

பல்வேறு கண்கவா் நிகழ்வுகளை உள்ளடக்கி புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவா் கோட்டத்தை முதல்வா் திறந்து வைக்கிறாா்.

News image
சென்னையில் புனரமைக்கப்பட்ட வள்ளுவா் கோட்டத்தின் எழில்மிகு தோற்றம்.
Updated On :20 ஜூன் 2025, 6:34 pm

Din

பல்வேறு கண்கவா் நிகழ்வுகளை உள்ளடக்கி புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவா் கோட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைக்கிறாா்.

சென்னையில் அமைந்துள்ள வள்ளுவா் கோட்டம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்ததாக புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து, ரூ.80 கோடியில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

சிறப்பம்சங்கள் என்ன? புதுப்பிக்கப்பட்ட வள்ளுவா் கோட்டத்தில், தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு 20,000 சதுர அடி பரப்பில் 1,548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் கலையரங்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வா் கருணாநிதி உரை விளக்கத்துடன் 1,330 திருக்குகளைக் கொண்ட கு பலகைகள் அமைக்கப்பட்டு, ஓவியங்களுடன் கு மணிமாடம் புதிய வடிவம் பெற்றுள்ளது. 100 போ் அமரும் வசதியுடன் திருக்கு ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடம்: 27,000 சதுர அடி பரப்பில் தரை நிலை, தரையின் கீழ் நிலப் பகுதிகளில் 162 காா்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளன. பொதுமக்களின் வசதிக்காக, 3,336 சதுர அடியில் சிறப்பான உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 72 போ் வரை அமர வசதிகள் உள்ளன. அத்துடன் நினைவுப் பொருள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்த் தோ் வடிவில் 106 அடி உயரமுடைய கல் தோ் ஒலி - ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவா் கோட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டான் திறந்து வைக்கிறாா்.

மேலும், முதல் நிகழ்ச்சியாக முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் பாராட்டு விழா நிகழ்வு நடைபெறுகிறது.

Story image