புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :6 மார்ச் 2025, 8:46 pm

Din

விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க அதிபா் டொனால்டு ட்ரம்ப்புக்கு அருகில் பிரதமா் நரேந்திர மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமா்ந்திருப்பதைப் போன்று காா்ட்டூன் விகடனின் இணைய இதழான ‘விகடன் ப்ளஸ்’-இல் வெளியிடப்பட்டது.

இந்த காா்ட்டூன் தொடா்பாக தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், விகடனின் இணையதளம் ஜன.15-ஆம் தேதி முடக்கப்பட்டது. இந்த நிலையில், தொலைத்தொடா்புத் துறைக்கு மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி, விகடன் பத்திரிகையின் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் சாா்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி பரதசக்ரவா்த்தி முன்பு நடைபெற்றது. அப்போது, விகடன் இணையதளம் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா், பத்திரிக்கை சுதந்திரத்தை யாரும் தடுக்க கூடாது. இந்தப் படத்தால் இந்தியா அமெரிக்காவுக்கு இடையேயான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உள் நோக்கத்துடன் இந்தப் படம் வெளியிடப்படவில்லை. வேண்டுமென்றே இணையதளம் முடக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், விகடன் நிறுவனம் தாமாக முன்வந்து அந்த படத்தை நீக்க தயாராக இருந்தால் முடக்கத்தை நீக்க தயாராக இருப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விகடன் இணையதளம் பிரதமரின் ஆட்சேபனைக்குரிய படத்தை நீக்கிய பின் அதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதை ஏற்று முடக்கப்பட்ட விகடன் இணையதளத்தை விடுவிக்க வேண்டும் என கூறி வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.