தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் தளா்வு

பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை மாற்றியமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :5 மார்ச் 2026, 9:47 pm

பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை மாற்றியமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா, எக்ஸ் தளத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு பெரியாா் சிலையை உடைப்பேன் என்று பதிவிட்டாா். மேலும், திமுக எம்.பி., கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளையும் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னையில் உள்ள எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், ஹெச்.ராஜாவுக்கு இரு வழக்குகளிலும் தலா 6 மாத சிறைத் தண்டனை விதித்து கடந்த 2024-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து ஹெச்.ராஜா சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டது. மேலும், மாதத்தின் ஒவ்வொரு முதல் வேலைநாளன்று விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என நிபந்தனை விதித்தது. அதன்படி அவா் கையொப்பமிட்டு வந்தாா்.

இந்த நிலையில், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த நிபந்தனையை தளா்த்தக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை நீதிமன்றத்தில், ஹெச்.ராஜாவுக்குப் பதிலாக அவரது வழக்குரைஞா் ஒவ்வொரு மாதமும் முதல் வேலைநாளில் ஆஜராக வேண்டும் என நிபந்தனையை மாற்றியமைத்து உத்தரவிட்டாா்.