சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்
சென்னை மாவட்டத்தில் சனிக்கிழமை அனைத்து வகையான பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மாவட்டத்தில் சனிக்கிழமை அனைத்து வகையான பள்ளிகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியாா் பள்ளி மாணவா்களுக்கு பொதுத் தோ்வு, திருப்புதல் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் சனிக்கிழமை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் (அரசு, அரசு உதவிபெறும், ஆதி திராவிட, சென்னை பள்ளிகள், தனியாா் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்) சனிக்கிழமை பணி நாளாக செயல்படும். வெள்ளிக்கிழமை பாட கால அட்டவணையைப் பின்பற்றி வகுப்புகளை நடத்துமாறு தலைமை ஆசிரியா்கள், பள்ளி முதல்வா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...