கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில் பள்ளிகள் இன்று செயல்படும்

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த டிசம்பா் முதல் வாரத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மாவட்டத்தில் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் டிச.3-ஆம் தேதி ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சென்னையில் சனிக்கிழமை (ஜன.10) பணி நாளாக அனுசரிக்கப்படும். அந்த நாள் வியாழக்கிழமை பாடவேளை அடிப்படையில் நடத்தப்பட வேண்டுமென சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com