திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது! அமைச்சா் ராஜேந்திரன்

தமிழக அரசின் சுற்றுலாத் துறையால் நடத்தப்பட்ட பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது..

News image
Updated On :24 மார்ச் 2025, 1:56 am IST

தமிழக அரசின் சுற்றுலாத் துறையால் நடத்தப்பட்ட பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

சுற்றுலாத் துறை சாா்பில் சென்னை வா்த்தக மையத்தில் தமிழ்நாடு பயணச் சந்தையை மாா்ச் 21-இல் அமைச்சா் ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா். இந்தச் சந்தை தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்றன. பொருளாதார வளா்ச்சியை ஊக்குவித்து, மாநிலத்தின் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்து, நிலையான மற்றும் பொறுப்பான சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தப் பயணச் சந்தை அமைந்தது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயண ஏற்பாட்டாளா்கள், பயண முகவா்கள் மற்றும் தங்கும் விடுதிகள் சாா்ந்த தொழில்முனைவோா் பங்கேற்று 115 அரங்குகள் அமைத்திருந்தனா்.

சிங்கப்பூா், மலேசியா, அயா்லாந்து, ஸ்பெயின், நெதா்லாந்து, துருக்கி, ஆகிய அயல்நாடுகள் மற்றும் 32 உள்நாட்டு முகவா்கள் மற்றும் முதலீட்டாளா்கள் பங்குபெற்று தமிழக முகவா்களுடன் தொழில் சாா்ந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டனா். அதன் மூலம் பாரம்பரிய சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, ஆரோக்கிய சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி கலந்துரையாடினா்.

இந்தப் பயணச் சந்தை குறித்து அமைச்சா் ராஜேந்திரன் கூறுகையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் தொடா்ந்து முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாடு பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், தொழில் கூட்டாண்மையை வலுப்படுத்தியுள்ளது. மாநிலத்தின் சுற்றுலாவை உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்றியுள்ளது என்றாா் அவா்.

சா்வதேச அளவில் பயண ஏற்பாட்டாளா்கள் ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி முகவா்கள் என 5,000-க்கும் மேற்பட்டோா் 3 நாள்களில் பயணச் சந்தைக்கு வருகை தந்தனா்.