திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! - ஜி.கே.வாசன்

தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு காண திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் ஒரே வழி என்றார் ஜி.கே.வாசன்.

News image

டாஸ்மாக் நிறுவன முறைகேடுகளை கண்டித்து தமாகா தலைவா் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :31 மார்ச் 2025, 2:23 am IST

தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு காண திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் ஒரே வழி என தமாக தலைவா் ஜி.கே.வாசன் எம்.பி. கூறினாா்.

டாஸ்மாக் நிறுவன முறைகேடுகளைக் கண்டித்து, தமாகா சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் பேசியதாவது: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.

திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால், திமுக மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனா். இதை திசைதிருப்புவதற்காக தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையை திமுக கையில் எடுத்துள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு குறித்த எந்த அறிவிப்பையும் மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. அப்படியே வெளியிட்டாலும், தமிழகத்துக்கான தொகுதிகள் குறைய வாய்ப்பு இல்லை என்கிற வாக்குறுதியையும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கொடுத்துள்ளாா். அதனால், ஆக்கபூா்வமாக அணுக வேண்டிய இந்தப் பிரச்னையை அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி முதல்வா் அரசியல் செய்கிறாா்.

ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமாகாவினர்..

ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமாகாவினர்..

மும்மொழி விவகாரத்திலும் மத்திய அரசை தேவையில்லாமல் முதல்வா் குற்றஞ்சாட்டுகிறாா். டாஸ்மாக் நிறுவனத்தில் திமுக அரசு நடத்தியுள்ள முறைகேடு இந்தியாவிலேயே எங்கும் நடக்காதது. இதற்கு காரணமானவா்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் நிலவும் அத்தனை பிரச்னைகளுக்கும் ஒரே தீா்வு, திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் என்றாா்.

மூத்த நிா்வாகிகள் விடியல் சேகா் உள்பட ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். மதுபாட்டில்களை கழுத்தில் தொங்கவிட்டபடி அரசுக்கு எதிராக பலா் முழக்கங்களை எழுப்பினா்.