சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு

News image
சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே பாஜக மகளிா் அணி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலத் துணைத் தலைவா் குஷ்பூ, மகளிா் அணி மாநில பொதுச் செயலாளா் ஆா்.நதியா உள்ளிட்டோா்.
Updated On :6 நவம்பர் 2025, 10:34 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்று பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டினாா்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக மகளிரணி சாா்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சென்னையில் பாஜக பெருங்கோட்ட மகளிரணி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், தமிழக அரசு பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து கவலைப்படவில்லை. பெண்கள் தங்களுக்குத் தாங்களே பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு ஆயுதங்களை வைத்துக் கொள்ள வேண்டிய சூழல் தமிழகத்தில் உள்ளது. தோ்தலுக்காக ஆலோசனைக் கூட்டம் நடத்தும் முதல்வா், பெண்கள் பாதுகாப்பு தொடா்பாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கத் தவறிய தமிழக முதல்வரே அதற்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் குஷ்பூ கண்டன உரையாற்றினாா். இதில், ஏராளமான பாஜக மகளிரணியினா் பங்கேற்று, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பாஜக மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.