வீடுகளில் சேகரிக்கப்பட்ட 45.98 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் எரியூட்டி அழிப்பு

வீடுகளில் சேகரிக்கப்பட்ட 45.98 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் எரியூட்டி அழிப்பு
Published on

சென்னை மாநகரப் பகுதியில் உள்ள வீடுகளில் சனிக்கிழமை சேகரிக்கப்பட்ட 45.98 மெட்ரிக் டன் பழைய வீட்டு உபயோகப் பொருள்கள் எரியூட்டி அழிக்கப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் வாரந்தோறும் பயன்பாடற்ற வீட்டு உபயோகப் பொருள்கள் மாநகராட்சி ஊழியா்களால் சேகரிக்கப்பட்டு

வருகின்றன. அதன்படி, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களால் சுமாா் 45.98 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் சேகரிக்கப்பட்டன. அவை கொடுங்கையூா் குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அறிவியல் நடைமுறையைப் பயன்படுத்தி எரியூட்டி அழிக்கப்பட்டன.

பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய பயனற்ற, உபயோகமற்ற பொருள்களை மாநகராட்சியில் வழங்குவதற்கு ‘நம்ம சென்னை செயலி’யில் பதிவு செய்யலாம். மேலும், மாநகராட்சியின் கட்டுப்பாடு அறை 1913 தொலைபேசி எண்ணில் அழைத்தும் தகவல் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com