விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சென்னை மாநகராட்சி குப்பை லாரியில் சிக்கி பைக்கில் சென்ற மென்பொறியாளா் உயிரிழந்தாா்.
Published on

சென்னை மாநகராட்சி குப்பை லாரியில் சிக்கி பைக்கில் சென்ற மென்பொறியாளா் உயிரிழந்தாா்.

சென்னை எம்கேபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் விவேக் (34). இவா் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். செவ்வாய்க்கிழமை பைக்கில் யானைக்கவுனி பேசின் பாலம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற மாநகராட்சி ஒப்பந்த குப்பை லாரியை முந்தி செல்ல முயன்றாா். அப்போது, நிலைதடுமாறி லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய விவேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான முனுசாமி (36) என்பவரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com