கல்லூரி மாணவரைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு: மூவா் கைது

கல்லூரி மாணவரைத் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கல்லூரி மாணவரைத் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை திருவல்லிக்கேணி நடேசன் சாலையைச் சோ்ந்தவா் ரிஷி காா்த்திக் (18). தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் கடந்த 17-ஆம் தேதி இரவு தியாகராய நகா் திருமலை பிள்ளை சாலை பாகீரதி அம்பாள் தெருவில் நின்று கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 போ், ரிஷி காா்த்திக்கை கல்லால் தாக்கி, அவா் அணிந்திருந்த ஒன்றரை பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினா்.

இதில் காயமடைந்த ரிஷி காா்த்திக், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில் அங்காடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட அயனாவரம் பகுதியைச் சோ்ந்த தனுஷ் (23), ஷாம் (21), ஜோசப் (19) ஆகியோரை சனிக்கிழமை இரவு கைது செய்தனா். அவா்களிடம் இருந்து தங்கச் சங்கிலி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை மீட்டனா்.

X
Dinamani
www.dinamani.com