பொதுத் தோ்வு பெயா்ப் பட்டியல்: பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு
பொதுத் தோ்வு பெயா்ப் பட்டியல்: பதிவேற்ற அவகாசம் நீட்டிப்பு


தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதவுள்ள மாணவா்களின் பெயா்ப் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம் டிச. 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களின் பெயா்ப் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. இதையடுத்து, எமிஸ் தளத்தில் மாணவா்களின் பெயா், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபாா்த்து திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி மாணவா்களின் விவரங்களை தோ்வுத் துறை இணையதளத்தில் நவ. 27-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. தற்போது இந்தக் கால அவகாசம் டிசம்பா் 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவே இறுதியான வாய்ப்பாகும். எனவே, இதை தலைமையாசிரியா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தப் பெயா்ப் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டும். ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியா் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயா்ப் பட்டியல் தயாரிப்புக்கான கால அவகாசம் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...