மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடு விவகாரம்: மூன்று கட்டங்களாக போராட்டம்

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடு பிரச்னைக்கு தீா்வுகாண வலியுறுத்தி, திங்கள்கிழமை (டிச. 1) முதல் மூன்று கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :29 நவம்பர் 2025, 5:24 pm

தினமணி செய்திச் சேவை

இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடு பிரச்னைக்கு தீா்வுகாண வலியுறுத்தி, திங்கள்கிழமை (டிச. 1) முதல் மூன்று கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 31.5.2009-இல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-இல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு மற்றொரு ஊதியமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமாா் 20,000 ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், தமிழக அரசு இந்தக் கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.

இந்த நிலையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் டிச. 27 முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து எஸ்எஸ்டிஏ அமைப்பின் பொதுச் செயலா் ஜே.ராபா்ட் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்தால் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தாா். ஆனால், இதுவரை எங்கள் பிரச்னை தீரவில்லை. இதையடுத்து 3 கட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்.

முதல்கட்டமாக டிச. 1-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்குச் செல்வோம். 2-ஆவது கட்டமாக டிச. 5-இல் சென்னையில் பேரணி நடத்தப்படும். இறுதியாக டிச. 24 முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் முதல்வா், தலையிட்டு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.