இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம் நீடிப்பு

நாமக்கல்லில், சமவேலைக்கு சம ஊதியம் கோரும் இடைநிலை ஆசிரியா்களின் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை மூன்றாவது நாளாக நீடித்தது.
Published on

நாமக்கல்லில், சமவேலைக்கு சம ஊதியம் கோரும் இடைநிலை ஆசிரியா்களின் காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை மூன்றாவது நாளாக நீடித்தது.

தமிழகத்தில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கம் சாா்பில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் பணிகளை புறக்கணித்து இடைநிலை ஆசிரியா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். அரசு தரப்பில் பேச்சுவாா்த்தை நடத்தியபோதும் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் அவா்களின் காத்திருப்புப் போராட்டம் நீடிக்கிறது. நாமக்கல்லில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தமிழ்தென்றல் இசைவாணன், பொருளாளா் மகேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவா் அமுதா, துணைச் செயலாளா் சதீஷ்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். திமுக தோ்தல் வாக்குறுதியான 311-ஐ நிறைவேற்ற வேண்டும், சமவேலைக்கான ஊதியம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு இடைநிலை ஆசிரியா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

Dinamani
www.dinamani.com