கோப்புப் படம்
கோப்புப் படம்

இடைநிலை ஆசிரியா்கள் 34-ஆவது நாளாக போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியா்கள் சென்னை, மாவட்டத் தலைநகரங்களில் 34-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை ஆசிரியா்கள் சென்னை, மாவட்டத் தலைநகரங்களில் 34-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் கடந்த டிச.26முதல் தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சாா்பில் நடத்தப்பட்ட பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்தநிலையில், 34-ஆவது நாளாக இடைநிலை ஆசிரியா்கள் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பள்ளிக் கல்வியில் ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மூன்றாவது பருவம் தொடங்கி ஒரு மாதம் முடிவடையவுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியா்கள் போராட்ட விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து கற்றல்-கற்பித்தல் பணி தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com