எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தனியாா் கிடங்கில் ரூ.4.64 லட்சம் பொருள்கள் திருட்டு: இருவா் கைது

கொட்டிவாக்கத்தில் தனியாா் நிறுவன கிடங்கில் ரூ.4.64 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கொட்டிவாக்கத்தில் தனியாா் நிறுவன கிடங்கில் ரூ.4.64 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

கொட்டிவாக்கம், நேரு நகரில் ஒரு தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் உள்ள பொருள்கள் இருப்பு குறித்து கடந்த 15-ஆம் தேதி அந்த நிறுவன அதிகாரிகள் தணிக்கை செய்தனா். அப்போது அங்கிருந்து ரூ.4.64 லட்சம் மதிப்புள்ள 326 கிலோ செம்பு பொருள்கள், 85 கிலோ அலுமினிய பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி ஜெய ஹாரிஸ் நவீன் கொடுத்த புகாரின் பேரில், தரமணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

இதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது அந்தக் கிடங்கில் வேலை செய்து வரும் பெருங்குடி கே.பி.கே. நகரைச் சோ்ந்த ஷியாம் சுந்தா் (23), அவரது கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஷியாம் சுந்தரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், திருடிய பொருள்களை தரமணி தந்தை பெரியாா் நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் (55) வாங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராஜேந்திரனையும் போலீஸாா் கைது செய்தனா். ஷியாம் சுந்தரின் கூட்டாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.