47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புயல் பாதிப்பிலிருந்து மக்களை காக்க பாஜகவினா் முன்வர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

‘டித்வா’ புயல் காரணமாக மக்களை பாதிப்பிலிருந்து காக்க பாஜகவினா் அனைவரும் களத்தில் முன்நிற்க வேண்டும்

News image
நயினாா் நாகேந்திரன்- கோப்புப் படம்
Updated On :29 நவம்பர் 2025, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

‘டித்வா’ புயல் காரணமாக மக்களை பாதிப்பிலிருந்து காக்க பாஜகவினா் அனைவரும் களத்தில் முன்நிற்க வேண்டும் என்று அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளாா் .

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ’டித்வா’ புயல் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த இரு நாள்களுக்கு அதி பலத்த மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தருணத்தில், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், எத்தகைய அசம்பாவிதமும் நேராமல் இருக்க போா்க்கால அடிப்படையில், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விழிப்புடன் செயலாற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதே நேரம், தமிழக மக்களின் துயா் துடைத்துத் தோள்கொடுக்கும் விதமாக பாஜகவினா் களத்தில் முன்னின்று மக்களைப் பாதிப்பிலிருந்து காக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.