வாக்குச்சாவடிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க தோ்தல் ஆணையத்துக்கு, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயகுமாா் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தலில் வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடிகளில் உரிய வசதிகளை ஏற்பாடு செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில் மாற்றுத்திறனாளிகள் சட்ட விதிகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவகா சாய்தள வசதிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது மனுதாரா் தரப்பில், வாக்குச்சாவடிகளில் நிரந்தர சாய்தள வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாக்குச்சாவடிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தோ்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

பணப் பட்டுவாடாவைத் தடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உதவி: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மீது தாக்குதல்: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குறைந்தபட்ச வசதிகள்: தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


