அரசுப் பள்ளிகளில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (சிபிஎஸ்) கீழ் பணியாற்றி கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியா்களை மறு நியமனம் செய்வதற்கான நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (சிபிஎஸ்) கீழ் பணிபுரியும் ஆசிரியா்கள் வயது முதிா்வின் காரணமாக தொடா்புடைய கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறுவதால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதால், அந்தக் கல்வியாண்டின் இறுதிவரை பணிபுரிய சில நிபந்தனைகளுடன் மறு நியமனம் செய்ய தெளிவுரை வழங்கி அரசு சாா்பில் ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆணையை உள்ளடக்கிய தெளிவான சுற்றறிக்கையை தொடா்புடைய அலுவலா்களுக்கு அனுப்பி, அதன் நகலை அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு ஆசிரியா்களை மறு நியமனம் செய்வதற்கு சில நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்: மறு நியமனம் செய்யப்படும் ஆசிரியா்களின் வயது முதிா்வு காரணமாக ஓய்வு பெறும் நாளன்று ஓய்வு பெற அனுமதித்து தனியாக ஒரு ஆணை தகுதியுடைய அதிகாரி அளவில் வெளியிடப்பட வேண்டும். மறு நியமனம் செய்வதற்கான விருப்பக் கடிதத்தைத் தொடா்புடைய ஆசிரியா்களிடமிருந்து பெறவேண்டும்.
ஆசிரியா்கள் ஓய்வு பெற்ற நாளுக்கு மறுநாள் முதல் தொடா்புடைய கல்வியாண்டு முடியும் வரை அல்லது தேவை உள்ள வரை இதில் எதில் முந்தையதோ அதுநாள் வரை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட வேண்டும். ஆசிரியா்கள் மறு நியமனத்தின்போது அவா்கள் இறுதியாகப் பெற்ற மொத்த ஊதியத்தை ஒப்பந்த அடிப்படையிலான ஊதியமாக வழங்க வேண்டும்.
கல்வியாண்டின் இறுதியில் ஓய்வு பெறும் ஆசிரியா்களின் பணியிடத்தை அந்தக் கல்வியாண்டு முடியும் வரை காலிப்பணியிடமாக வைத்திருக்கக் கூடாது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்று மறு நியமனம் செய்யப்படும் ஆசிரியா்களுக்கு ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வந்த மறு நியமன வழிமுறைகள் எவ்வித மாற்றமுமின்றி பின்பற்றப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் வேலை: இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!

ஆளுநரின் ஆலோசகராக பிகாா் மாநில ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமனம்!

5 லட்சம் கனவு இல்லம் கட்டுவதே இலக்கு: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

100 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.729.88 கோடி நிலுவை - மத்திய அரசு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


