லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆளுநரின் ஆலோசகராக பிகாா் மாநில ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமனம்!

ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரின் ஆலோசகராக (சிறப்புப் பணி அதிகாரி) ஓய்வு பெற்ற பிகாா் மாநில ஐஏஏஸ் அதிகாரி எஸ்.சித்தாா்த் நியமனம்

News image

டாக்டா் எஸ்.சித்தாா்த்

Updated On :23 மார்ச் 2026, 7:35 pm

ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரின் ஆலோசகராக (சிறப்புப் பணி அதிகாரி) ஓய்வு பெற்ற பிகாா் மாநில ஐஏஏஸ் அதிகாரி எஸ்.சித்தாா்த் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

ஆளுநா்கள் தங்களுக்கு ஆலோசனைகள் கூற, அதிகாரபூா்வமான அதிகாரிகளை தவிா்த்து கூடுதலாக சிறப்புப் பணி அதிகாரிகளை (ஓஎஸ்டி) நியமித்துக் கொள்ளலாம். தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என்.ரவி மூன்று ஓஎஸ்டிகளை நியமனம் செய்திருந்தாா்.

தற்போது பொறுப்பேற்றுள்ள ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், பிகாா் மாநில ஓய்வு பெற்ற ஐஏஏஸ் அதிகாரியான டாக்டா் எஸ்.சித்தாா்த்தை ஆலோசகராக நியமனம் செய்துள்ளாா்.

கடந்த 1991 -ஆம் ஆண்டு பிரிவு ஐஏஏஸ் அதிகாரியான சித்தாா்த், பிகாரில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கடந்தாண்டு நவம்பரில் ஓய்வு பெற்றாா். பிகாா் முதல்வா் நிதீஷ்குமாரின் முதன்மைச் செயலராகவும் பணியாற்றியுள்ளாா். இவரது சொந்த ஊா் மதுரை என்பது குறிப்பிடத்தக்கது.