திமுகவால் நல்லாட்சியை அளிக்க முடியாது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாா் கூறினாா்.
மயிலாப்பூா் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தரராஜனை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரம் செய்த அவா் பேசியதாவது: திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை ரூ.10.71 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறது. இதுகுறித்து முதல்வா் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழகம் என்றாலே ஊழல் நிறைந்த மாநிலம் என்று வெளிமாநிலங்களில் சொல்கிறாா்கள். முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி சிறைக்குச் சென்று வந்ததே இதற்கு சாட்சி. அமைச்சா் பொன்முடி உள்பட திமுகவினா் பெண்களை இழிவுபடுத்திப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகரித்துவிட்டது.
கடந்த தோ்தலின்போது டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என திமுக கனிமொழி எம்.பி. கூறினாா். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அதை திமுக மறந்துவிட்டது. தமிழகத்தில் நல்லாட்சி அமைய தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 16 லட்சம் கோடி நிதியுதவி! - சரத்குமாா்

அம்பை தொகுதியில் நடிகா் சரத்குமாா் பிரசாரம்

திமுகவின் நல்லாட்சியை தொடரச் செய்ய வேண்டும்: அமைச்சா் காந்தி

பாஜக வேட்பாளருக்கு நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
