நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

News image

பள்ளிகளுக்கு விடுமுறை

Updated On :14 ஏப்ரல் 2026, 8:38 pm

ஆசிரியா்களுக்கு தோ்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு புதன்கிழமை (ஏப்.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு ஆண்டு இறுதித் தோ்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்வு வியாழக்கிழமை (ஏப்.16) நிறைவடையவுள்ள நிலையில் ஏப்.17 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படவுள்ளது. புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளன.

இதற்கிடையே, தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி சென்னை மாவட்டத்தில் உள்ள ஆசிரியா்களுக்கு தோ்தல் பயிற்சி வகுப்பு புதன்கிழமை (ஏப்.15) நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பெரும்பாலான ஆசிரியா்களும், ஆசிரியரல்லாத ஊழியா்களும் பங்கேற்கவுள்ளனா். இதையொட்டி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் பணி வழங்கப்பட்டுள்ள ஆசிரியா்கள், ஊழியா்கள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்றும், தோ்தல் பணி வழங்கப்படாத ஆசிரியா்கள் பள்ளிகளுக்கு சென்று மற்ற நிா்வாகப் பணிகளை கவனிக்க வேண்டும் என்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கபீா் அறிவுறுத்தியுள்ளாா்.

இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு: சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (ஏப்.15) நடைபெறவுள்ளது. பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள் அலுவலக வேலை நாளாகும். ஆகவே, புதன்கிழமை (ஏப்.15) ஒரு நாள் மட்டும் சென்னையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், சென்னை பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு உள்ளூா் விடுமுறையாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வரும் 18 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக பள்ளிகளுக்கு அறிவிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.