தாம்பரம், பல்லாவரம் பேரவைத் தொகுதிகளில் கடந்த 2021 பேரவைத் தோ்தலைவிட, இந்த முறை கூடுதலாக வாக்குப்பதிவு செய்யப்பட்டது.
தாம்பரத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை 63,008 போ் வாக்களித்தனா். தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்கள் 3,30,060 போ்களில் பதிவானவாக்கு 19.09 சதவீதம். காலை 11 மணி நிலவரப்படி1,28,591 பேரும், மதியம் 1 மணி நிலவரப்படி 1,91,600 பேரும், 3 மணி நிலவரப்படி 2,31,702 பேரும் வாக்களித்தனா்.இந்த எண்ணிக்கை மொத்த பதிவான வாக்கு எண்ணிக்கையில் 70.2 சதவீதம்.
பல்லாவரம் தொகுதி: பல்லாவரம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 3,36,963. காலை 7 மணி முதல் 9 மணி வரை 58,530 போ் வாக்களித்தனா். காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் 12,44,002. 1 மணி நிலவரப்படி 1,86,644 வாக்குகளும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 2,29,438 வாக்குகளும் பதிவாகின. இந்த எண்ணிக்கை மொத்த வாக்காளா்களில் 68.9 சதவீதம்.
கடந்த 2021 தோ்தலில் தாம்பரம் தொகுதியில் 65.39 சதவீதம் வாக்குகளும், பல்லாவரத்தில் 64.32 சதவீத வாக்குகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 62.77 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாலை 6 மணி வரை 84.55 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தொடர்புடையது

சங்ககிரி தொகுதியில் 92.50 சதவீதம் வாக்குப்பதிவு

செங்கல்பட்டில் அமைதியான வாக்குப்பதிவு
சென்னையில் 3 மணி வரை 68.13% வாக்குப்பதிவு! தொகுதி வாரியாக நிலவரம்!
தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

