மேற்கு வங்க மாநிலத்தில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 18.76 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் இன்று காலை தொடங்கிய நிலையில், வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் 18.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
16 மாவட்டங்களில் உள்ள 152 சட்டப்பேரவைத் தொகுதிகளில், முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி, 3.60 கோடி வாக்காளர்களில் 18.76 சதவீதத்தினர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, முதல் இரண்டு மணி நேரத்தில் அதிகபட்சமாக பாங்குரா சட்டப்பேரவைத் தொகுதியில் 22.05 சதவீத வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து, முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சம்சேர்கஞ்ச் தொகுதியில் 21.85 சதவீதமும், மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தின் சந்திரகோனா தொகுதியில் 21.83 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
மிகக் குறைந்த அளவாக, கூச் பெஹார் தெற்குத் தொகுதியில் 15.57 சதவீத வாக்குகள் பதிவாகின. இதைத் தொடர்ந்து, மால்டா மாவட்டத்தின் சஞ்சல் தொகுதியில் 15.64 சதவீதமும், ஹரிச்சந்திரபூர் தொகுதியில் 15.98 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. அவற்றைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள்.
294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு இன்றும், இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த முதல்கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் 3.60 கோடி போ் (ஆண்கள் 1.84 கோடி, பெண்கள் 1.75 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 465). இவா்கள் வாக்களிக்க வசதியாக, 44,378 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 2.5 லட்சம் பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
Summary
The Election Commission of India has stated that 18.76 percent of votes were recorded in the state of West Bengal as of 9:00 AM today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 1 மணி நிலவரப்படி 61.11% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!

மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!

மேற்கு வங்கம்: 11 மணி நிலவரப்படி 41.11% வாக்குகள் பதிவு!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு


