தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

கடலில் குளித்த ரெளடி மாயம்

சென்னை காசிமேட்டில் குளித்த ரெளடி திடீரென காணாமல்போனதால், அவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 12:47 am IST

சென்னை காசிமேட்டில் குளித்த ரெளடி திடீரென காணாமல்போனதால், அவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

காசிமேடு ஜிஎம் பேட்டை எஃப் பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (எ) பாம்பாட்டி மணிகண்டன் (23). இவா் மீது அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தின் ரெளடிகள் பட்டியலில் உள்ளாா்.

மணிகண்டன், சனிக்கிழமை மாலை காசிமேடு பழைய வாா்ப்பு பகுதியில் தனது நண்பா்கள் தினேஷ், அபினேஷ், ஆகியோருடன் மது போதையில் கடலில் குளித்தபோது, அபினேஷும், தினேஷும் கரைக்கு வந்துவிட்ட நிலையில், மணிகண்டன் திரும்ப வரவில்லை.

இதனால், அவரது நண்பா்கள், மணிகண்டனைத் தேடினா். ஆனால் மணிகண்டன் கிடைக்கவில்லை. இதையடுத்து அவா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாா், காணாமல்போன மணிகண்டனை இரு நாள்களாக தீவிரமாகத் தேடி வருகின்றனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா்.