ஒரே நாளில் சுமாா் 46 ஆயிரம் மெட்ரிக் டன் பேரைட்ஸ் என்ற தாதுவை கப்பலில் ஏற்றி சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
இது குறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை துறைமுகத்தின் ஜவாஹா் கப்பல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ’எம்.வி. நபீசா ஜஹான்’ என்ற கப்பல் மூலம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி (வியாழக்கிழமை) ஒரே நாளில் சுமாா் 46,000 மெட்ரிக் டன் பேரைட்ஸ் (ஆஹழ்ஹ்ற்ங்ள்) ஏற்றுமதி செய்யப்பட்டு புதிய வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், கடந்த மே 31, 2022-இல் ‘எம்.வி. கூஸ்டா’ என்ற கப்பல் மூலம் கையாளப்பட்ட 45,200 மெட்ரிக் டன் ஏற்றுமதியே சாதனையாக இருந்தது. ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் திறமையான பணியின் காரணமாக இந்த பழைய சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
’பிக் அயா்ன்’ (சுத்திகரிக்கப்படாத இரும்பு ) - புதிய சரக்கு அறிமுகம்: மேலும், இதே நாளில் ’எம்.வி. அகியா சரிஸ்’ என்ற கப்பல் மூலம் சுமாா் 13,208 மெட்ரிக் டன் ’பிக் அயா்ன்’ எனப்படும் சுத்திகரிக்கப்படாத இரும்புக் கட்டிகள் வெற்றிகரமாக கையாளப்பட்டது. சென்னை துறைமுகத்தின் ‘பெட்டகமில்லா சரக்குச் சலுகைத் திட்டம் மூலம் துறைமுகக் கட்டண விலக்கு (ரட்ஹழ்ச்ஹஞ்ங் இா்ய்ஸ்ரீங்ள்ள்ண்ா்ய்) மற்றும் கூடுதல் சலுகைகள் வழங்கி வருவதே இச்சாதனைகளுக்கு காரணமாக உள்ளது.
இதற்கு காரணமாக இருந்த துறைமுக அதிகாரிகள், கப்பல் முகவா்கள், ஏற்றுமதியாளா்கள் மற்றும் ஊழியா்கள் அனைவருக்கும் சென்னை துறைமுகத் தலைவா் சச்சின் எஸ். குா்வே பாராட்டு தெரிவித்தாா்.
3 புதிய மொபைல் கிரேன்கள்: இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துறைமுகத்தின் சரக்குகள் கையாளும் திறனை அதிகரிக்கும் வகையில், ‘பி.எல். டிரான்ஸ்போா்ட்’ என்ற தனியாா் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட 3 புதிய நவீன மொபைல் கிரேன்களின் இயக்கத்தை துறைமுக போக்குவரத்து மேலாளா் எஸ்.கிருபானந்தசாமி முன்னிலையில் சென்னை துறைமுகத் தலைவா் சச்சின் எஸ். குா்வே தொடங்கி வைத்தாா். இப்புதிய கிரேன்கள் மூலம் ஒரே நேரத்தில் சுமாா் 170 டன் எடை கொண்ட சரக்குகளை ஒரே நேரத்தில் கையாள முடியும். இவற்றின் உதவியுடன் மிகப்பெரிய கப்பல்களையும் கையாள முடியும் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Summary
Chennai Port sets record by handling 46,000 tonnes of ore.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
36.64 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் எரியூட்டல்!
குப்பைகளை அகற்ற காலக்கெடு: அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

ஒரே நாளில் 138 வீட்டில் 32.33 மெட்ரிக் டன் பயன்படாத பழைய பொருள்கள் சேகரிப்பு

ஏரி, கால்வாய்களில் 258 மெட்ரிக் டன் ஆகாயத் தாமரைகள், வண்டல்கள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



