தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

18 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் 18 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

Amalraj

ஏ. அமல்ராஜ்(கோப்புப்படம்) - Dinamani

Published On :

சென்னை பெருநகர காவல்துறையில் 18 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சென்னை பெருநகர காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும்,விருப்பத்தின் அடிப்படையிலும்,பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் ஆய்வாளா்கள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக 18 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டாா்.

இதில், குறிப்பாக, காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா்கள் எம்.அனிதா வேணி கோயம்பேடு அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும், எம்.வெற்றிவேலு நுண்ணறிவுப் பிரிவுக்கும், டி.ஜெயக்குமாா் அடையாறு குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும், எம்.சூரியலிங்கம் திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும்,கே.ராஜேஷ் கண்ணா சிந்தாதிரிப்பேட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இவ்வாறு காத்திருப்போா் பட்டியலில் இருந்த 10 ஆய்வாளா்கள் உள்பட 18 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.