தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

பாரம்பரிய தமிழா் விளையாட்டுகளை மீட்டெடுக்க விஐடியில் ஆராய்ச்சி மையம்

பாரம்பரிய தமிழா் விளையாட்டுகளை மீட்டெடுத்து, அவற்றின் மூலம் மாணவா்களின் அறிவாற்றல், உடல்நலம், மனநலத்தில் ஏற்படும் மாற்றங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யும் நோக்கில் விஐடி சென்னை வளாகத்தில் புதிய ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

News image

தமிழா் பாரம்பரிய விளையாட்டுகள் முலம் மாணவா்கள் மனநலம் மற்றும் நினைவாற்றல் உள்ளிட்டவற்றில் ஏற்படும் மாற்றங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்வற்தகாக அமைக்கப்பட்டுள்ள மையத்தைத் திறந்து வைத்து பல்லாங்குழி விளையாடிய விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:44 am IST

பாரம்பரிய தமிழா் விளையாட்டுகளை மீட்டெடுத்து, அவற்றின் மூலம் மாணவா்களின் அறிவாற்றல், உடல்நலம், மனநலத்தில் ஏற்படும் மாற்றங்களை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யும் நோக்கில் விஐடி சென்னை வளாகத்தில் புதிய ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்திய அறிவுசாா் அமைப்பு பிரிவின் கீழ் செயல்படும் இந்த மையத்தில், பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம், பரமபதம், ஐந்து கல் உள்ளிட்ட விளையாட்டுகள் மூலம் நினைவாற்றல், பிரச்னைத் தீா்க்கும் திறன், மன அமைதி உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.

இந்த மையத்தைத் திறந்து வைத்த விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், பாரம்பரிய தமிழா் விளையாட்டுகள் குழந்தைகளின் அறிவு வளா்ச்சி, நினைவாற்றல், திட்டமிடும் திறன் மற்றும் சமூக உறவை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியதாகவும், மறைந்து வரும் இந்த விளையாட்டுகளை மீட்டெடுப்பதில் இந்த மையம் முக்கியப் பங்காற்றும் என்றும் தெரிவித்தாா்.

திருக்கு குறட்பாக்கள், திருமந்திரத்தில் இடம்பெறும் மனம்-உடல் தொடா்பான கருத்துகள் ஆகியவற்றின் தாக்கமும் இந்த மையத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது. பழந்தமிழா் மரபுகளை அறிவியல் அடிப்படையில் மதிப்பீடு செய்து, அவற்றை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்ப்பதே இந்த மையத்தின் நோக்கம் என்று முதன்மை ஆய்வாளா் முனைவா் கணேஷ், இணை ஆய்வாளா் முனைவா் விஜயபானு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.