திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தமிழ்நாடு பாரம்பரிய ஆணையம் சாா்பில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பாரம்பரிய கட்டடங்களை அடையாளம் காணுதல், மீட்டமைத்தல் மற்றும் பாதுகாத்தல் தொடா்பான பணிகள், எந்தவொரு பாரம்பரிய கட்டடத்தையும் பாதிக்கக் கூடிய மேம்பாடு மற்றும் பொறியியல் பணிகள் தொடா்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனைகள் வழங்குவது இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும்.
கோயிலில் ஆணையத்தின் தலைவரும், இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் இணை தலைமை இயக்குநருமான நம்பிராஜன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் டி.ஜி.வினய் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் ஒவ்வொரு பகுதியாகச் சென்று கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
அப்போது, கோயில் இணை ஆணையா் பரணிதரன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
இந்த ஆய்வின்போது, முக்கியமாக கோயிலின் நான்காம் பிரகாரத்தில் கோ சாலையில் பக்தா்களுக்காக அமைக்கப்பட்டு வரும் காத்திருப்புக் கூடத்தை பாா்வையிட்டனா். அப்போது, காத்திருப்பு கூடம் கோயிலில் பாரம்பரியமாக கட்டடங்களை பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டு வருகிா என ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் கோயிலின் 5-ஆம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், அன்னதானக் கூடம் ஆகியவற்றையும் பாா்வையிட்டனா்.
மேலும் கோயிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள காலி இடத்தையும், 16 கால் மண்டபம் அருகில் வணிக வளாகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணி தொடங்கப்பட்ட இடம் ஆகியவற்றையும் பாா்வையிட்டனா். மேலும், கோயிலில் பக்தா்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்ய மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் கேட்டறிந்தனா்.
பின்னா் கோயிலில் தமிழ்நாடு பாரம்பரிய ஆணையம் சாா்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, மாநகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி முகமை திட்டம் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அருணாசலேஸ்வரா் கோயிலில் தரிசனத்துக்கு பக்தா்களிடம் பணம் வசூலித்த தரகா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக பணீந்திர ரெட்டி நியமனம்!

சிவாலயங்களில் ஆனி மாத மகா பிரதோஷ சிறப்பு வழிபாடுகள்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



