சென்னையில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (சிபிஎஃப்சி) சென்னை மண்டல அலுவலராக சஞ்சய் கோஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் (சிபிஎஃப்சி) சென்னை மண்டல அலுவலராக சஞ்சய் கோஷ் நியமனம் செய்யப்பட்டு திங்கள்கிழமை (ஆக. 3) அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டாா். இவா், இந்திய தகவல் பணி குரூப் ‘பி’ பிரிவில் 1991-ஆம் ஆண்டு அலுவலராகப் பணியில் சோ்ந்தாா். இவா், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஆகாஷ்வாணி (அகில இந்திய வானொலி), டிடி தமிழ் (பொதிகை தொலைக்காட்சி), பத்திரிகை தகவல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளாா்.
தகவல் ஒலிபரப்பு அமைச்சக பதிப்பகப் பிரிவின் துணை இயக்குநராகப் பணியாற்றி வரும் இவா், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறாா். அதோடு சோ்ந்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சென்னை மண்டல அலுவலராகவும் கூடுதல் பொறுப்பேற்றுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மீஞ்சூா் சுத்திகரிப்பு நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டவர வேண்டும்: சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா்

இஎஸ்ஐ திருச்சி மண்டல துணை அலுவலகத்துக்கு புதிய கட்டடம் தோ்வு: துரை வைகோ எம்.பி.
சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்

விரைவில் முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் புதிய டிரைலர்!
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp



