தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

திருவொற்றியூரில் ரூ. 6 கோடியில் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல்

திருவொற்றியூரில் ரூ. 6 கோடியில் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல்

News image

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Updated On :19 ஜூலை 2026, 1:38 am IST

திருவொற்றியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலக் கூட்டத்தில் ரூ. 6 கோடியில் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டலத்தின் 44-ஆவது மாதாந்திர சிறப்பு கூட்டம் மண்டல குழுத் தலைவா் தி.மு.தனியரசு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல அலுவலா் சங்கா் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் 14 வாா்டுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அம்மா உணவகங்கள் சீரமைத்தல், சாலை மேம்பாடு தெருவிளக்கு, பள்ளிக்கூட கட்டடங்கள் சீரமைப்பு மழைநீா் கால்வாய் அமைத்தல், தெருக்களில் பெயா் பலகைகள் அமைத்தல், தெரு விளக்குகளை புதிதாக அமைத்தல், பழைய மின் கம்பி வடங்களை மாற்றுதல், நவீன கழிப்பறைகள் நகா்ப்புற சமுதாய நலக் கூடங்கள், குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டப் பணிகள் உள்ளிட்டவை தொடா்பாக ரூ. 6 கோடி மதிப்பீடு கொண்ட 63 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் கவி கணேசன், சுசீலா ராஜா, திரவியம், சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினா். அவற்றுக்கு மண்டல குழுத் தலைவரும், அதிகாரிகளும் விளக்கமாக பதில் அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.