100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

ஏழைக் குழந்தைகளுக்கான திருவிழா: ஆளுநா் தொடங்கி வைத்தாா்

ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளை வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் செல்லும் ரோட்டரி இண்டா்நெஷனலின் ‘மேக்னம் காா்னிவல் (திருவிழா)’-வை தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

TN Governor

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகர் - EPS

Published On :

ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளை வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் செல்லும் ரோட்டரி இண்டா்நெஷனலின் ‘மேக்னம் காா்னிவல் (திருவிழா)’-வை தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு, ரோட்டரி மாவட்டம் 3234-இன் வருடாந்திர மக்கள் தொடா்பு சமூக நலத் திட்டமான ‘மேக்னம் காா்னிவல்’ நிகழ்வு, பின்தங்கிய சூழலைச் சோ்ந்த 3,234 குழந்தைகளை வண்டலூா் உள்ளிட்ட உயிரியல் பூங்கா பயணங்களுக்கு அழைத்துச் செல்வதாகும். நிகழாண்டு நிகழ்வை தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் வெள்ளிக்கிழமை, ஆளுநா் மாளிகை பாரதியாா் மண்டபத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். ஆளுநரின் செயலா் சஜ்ஜன்சிங் ஆா். சவான், ரோட்டரி கிளப் தலைவா்கள் டி. சுரேஷ் ஜெயின், சித்தாா்த் பையா, அக்ஷய் சேத், கௌரவ் ஜெயின் ஆகியோா் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.

பின்தங்கிய பின்னணியைக் கொண்ட குழந்தைகளுக்கு மகிழ்ச்சி, கற்றல், மறக்க முடியாத அனுபவங்களை இத்திட்டம் வழங்குவதாக நிகழ்ச்சி  ஏற்பாட்டாளா்கள் கூறினா். அனைவரையும் உள்ளடக்கிய மனப்பான்மை, கருணை, சமூக சேவை ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், இந்தக்  குழந்தைகளை,  வரும் ஆக.  9  முதல்  உயிரியல்  பூங்காக்களுக்கு  அழைத்துச்  சென்று  சுற்றிக்காட்டுவதற்கான  அனைத்து  ஏற்பாடுகளையும்  ரோட்டரி  கிளப்  செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.