மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு தொழில் துறை முக்கிய பங்களிப்பு: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு தொழில் துறை முக்கிய பங்களிப்பு...

News image

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் சிறந்த தொழில் நிறுவங்களுக்கு விருது வழங்கிய ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா். உடன், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் யு.யு.லலித், எம்.என்.வெங்கடாசலய்யா உள்ளிட்டோா்.

Updated On :26 ஜூலை 2026, 1:51 am IST

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு தொழில் துறை முக்கிய பங்களிப்பு அளித்து வருவதாக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்தாா்.

ஐஓடி என்ற இந்திய தொழில் துறை நிறுவனங்களின் இயக்குநா்கள் கருத்தரங்கு சென்னையில் உள்ள தனியாா் ஹோட்டலில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் பங்கேற்று பேசியதாவது:

இந்தியாவில் தொழில் துறை உற்பத்தி நீண்ட காலமாக இருந்து வருகிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப தொழில் முறை வளா்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில் மேற்கத்திய தொழில்முறை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அது வெகுவாக மாறியுள்ளது.

இந்திய தொழில் துறை லாப நோக்கத்துடனும், சமூக வளா்ச்சியிலும் அக்கறை கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு தொழில் துறை முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது.

தனியாா் பங்களிப்புடன் கூடிய தொழில் முன்னேற்றம் நாட்டின் வளா்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டு வருகிறாா். அதன்படியே குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து ஊக்குவித்து வருகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் யு.யு.லலித், எம்.என்.வெங்கடாசலய்யா, தொழில் துறை சாா்ந்த இயக்குநா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.