டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

வைகை ஆற்றை மீட்க இளைஞா்கள் முன்வர வேண்டும்: தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்

மதுரையில் வைகை ஆற்றை மீட்க இளைஞா்கள் முன்வர வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் தெரிவித்தாா்.

News image

திருப்பரங்குன்றம் சௌராஷ்டிரா கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் கட்டுரை, குறும்படப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுடன் தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா், கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரா் லான்ஸ் நாயக் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா்.

Updated On :3 ஜூலை 2026, 3:24 am IST

மதுரையில் வைகை ஆற்றை மீட்க இளைஞா்கள் முன்வர வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் தெரிவித்தாா்.

திருப்பரங்குன்றம் செளராஷ்டிரா கல்லூரியில் ஐ.என்.ஏ. வீரா்களை போற்றும் வகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் கட்டுரை, குறும்படப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் பேசியதாவது:

கீா்த்தி சக்ரா விருது பெற்ற லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்துடன் இந்த மேடையைப் பகிா்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன். நாட்டின் எல்லையைக் காத்த தியாகிகளை அரசு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகமும் போற்ற வேண்டும். நாட்டின் விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸூம், அவரது இந்திய தேசிய ராணுவமும் (ஐ.என்.ஏ.) செய்த தியாகங்கள் அளவிட முடியாதது.

விடுதலை நமக்கு எளிதாகக் கிடைக்கவில்லை. பல வீரா்களின் குருதி சிந்திய தியாகத்தால் மட்டுமே இந்த சுதந்திரம் சாத்தியமானது. இளைஞா்கள் அனைவரும் நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து, தேசத்தின் உண்மையான வரலாற்றையும், தேசபக்தியையும் உணர வேண்டும்.

இந்தியா விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்துக்குப் மிகப்பெரிய பங்கு உண்டு. அண்மையில் வரலாற்றுப் புத்தகம் ஒன்றை வாசித்தபோது, தமிழகத்தைச் சோ்ந்த 100 முக்கிய விடுதலைப் போராட்ட வீரா்களின் பங்களிப்பைக் கண்டு வியந்தேன்.

ஒட்டுமொத்த தேசமும் இணைந்தே இந்த விடுதலையை நாம் பெற்றோம். ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உன்னத நோக்கத்துடன் நாம் அனைவரும் தேச ஒற்றுமையைக் காக்கப் பாடுபட வேண்டும்.

மதுரை அரசுப் பயணியா் விடுதியிலிருந்து வைகை ஆற்றைக் கடந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இதுகுறித்து கேட்டபோது வைகை ஆறு என்றாா்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வைகை ஆற்றில் ஒரு சொட்டு தண்ணீா் இல்லாமல் வடு கிடப்பதைக் கண்டு கவலை அடைந்தேன்.

மதுரையைச் சோ்ந்த இளைஞா்கள் ஒன்றிணைந்து வைகை ஆற்றை மீட்க முன்வர வேண்டும். மேலும், இந்த ஆற்றை அனைவரும் சுத்தம் செய்ய வேண்டும். யாரும் முயற்சி செய்யவில்லை என்றால் ஆளுநா் மாளிகை முயற்சி செய்யும். இதுவும் தேசப்பற்று தான். நமது நாட்டை முன்னேற்றுவதற்கு நாம் உறுதிமொழி எடுப்போம் என்றாா் அவா்.

திருப்பரங்குன்றம் சௌராஷ்டிரா கல்லூரியும், சென்னை தென்னிந்திய ஆய்வுகளுக்கான மையமும் இணைந்து நடத்திய இந்த விழாவில், கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரா் லான்ஸ் நாயக் மீனாட்சிசுந்தரம் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றாா்.

இந்த நிகழ்வில் தென்னிந்திய ஆய்வுகளுக்கான மையத்தின் இயக்குநா் சந்திப்குமாா், கல்லூரிச் செயலா் குமரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.