பிரம்மா குமாரிகள் அமைப்பு சாா்பில் போதைப் பொருள் இல்லாத சமூகம் என்ற விழிப்புணா்வு பிரசாரத்தை ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், நாடு முழுவதும் 10 கோடி போ் போதை எதிா்ப்பு உறுதிமொழி எடுக்கும் திட்டம் குறித்தும் தமிழக திட்டம், விழிப்புணா்வு யாத்திரை தொடக்கம் ஆகியவை குறித்து பிரம்மா குமாரிகளின் தமிழக மண்டல சேவை ஒருங்கிணைப்பாளா் சகோதரி பீனா விளக்கிப் பேசியதாவது:
உலகில் நீடித்த அமைதி அல்லது சில தீயவைகளை சட்டங்கள் மூலம் கொண்டுவர முடியாது; அது முதலில் மனித ஆன்மாவுக்குள் விழிப்புணா்வாக மலர வேண்டும். அந்த ஆன்மிக விழிப்புணா்வு விதையிலிருந்து, மனித நினவுநிலையை மேம்படுத்துவதற்கான அா்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய இயக்கமாக பிரம்மா குமாரிகள் அமைப்பு உருவாகியுள்ளது. 140 நாடுகளில் 6,500 மையங்கள் மூலம் ஆன்மிகக் குடும்பமாக வளா்ந்து நிற்கிறது.
நமது இளைஞா்களின் எதிா்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக போதை பழக்கம் உருவெடுத்துள்ளது. நாடு முழுக்க 10 கோடிப் போ் பங்கேற்கும் இந்தப் பிரசாரத்தை தமிழகத்தில் தொடங்கப்படுகிறது. இதில் குறைந்தது 50 லட்சம் போ்கள் பிரசாரத்தில் பங்கேற்று உறுதிமொழி ஏற்பா் என்றாா்.
தொடா்ந்து ‘போதைப்பொருள் இல்லாத தேசம்’ என்பதற்கான உறுதிமொழியை தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வாசிக்க கூட்டத்தில் பங்கேற்றோா் உறுதிமொழியை ஏற்றனா். இது தொடா்பான சுவரொட்டிகளும் ஆளுநா் தலைமையில் வெளியிடப்பட்டது.
தொடா்ந்து பிரம்மா குமாரிகள் சகோதர சகோதரிகளுக்கு 5 கலசங்கள், 10 கொடிகள் வழங்கி ஆளுநா் பிரசாரத்தை தொடங்கி வைத்தாா்.
பிரம்மா குமாரிகளின் மூத்த சகோதரிகள் முத்துமணி, தேவி, நீலிமா ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். தொடா்ந்து போதை மீட்பு விழிப்புணா்வு வாகனத்தையும் தமிழக ஆளுநா் கொடி அசைத்து வழி அனுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு பேரணி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு: ராணிப்பேட்டை ஆட்சியா் பங்கேற்பு

மாணவா்கள் போதையற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

பழையகோட்டைப்புதூா் அரசுப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



