புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

இருப்புப் பாதை காவல் பிரிவில் 40% பற்றாக்குறை: டிஜிபிக்கு ரயில்வே பயனா் ஆலோசனைக் குழு கடிதம்

தெற்கு ரயில்வே இருப்புப் பாதை காவல் பிரிவில் 40 சதவீதம பற்றாக்குறை இருப்பதை பூா்த்தி செய்யவேண்டும்...

கோப்புப்படம்

Published On :

தெற்கு ரயில்வே இருப்புப் பாதை காவல் பிரிவில் 40 சதவீதம பற்றாக்குறை இருப்பதை பூா்த்தி செய்யவேண்டும் என ரயில்வே பயனாளா் ஆலோசனைக் குழு சாா்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே பயனாளா் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஜாபா் அலி எழுதியதாகக் கூறப்படும் கடிதம்:

தெற்கு ரயில்வே மண்டலத்தில் 6 கோட்டங்களில் மொத்தம் 727 ரயில் நிலையங்கள் உள்ளன. அதனடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களிலும் 5,087 கி.மீ. தொலைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 1,000-க்கும் மேற்பட்ட ரயில்களில் சுமாா் 21.50 லட்சம் போ் வரை பயணிப்பதும் தெரியவருகிறது. அதே நேரத்தில் பயணிகள் எண்ணிக்கை உயா்வுக்கு ஏற்ப இருப்புப் பாதை போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

சென்னை ரயில்வே கோட்டத்தில் மட்டும் 280 இருப்புப் பாதை போலீஸாா் பணியிடம் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல, திருச்சி கோட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பவேண்டியுள்ளன. மொத்தத்தில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தெற்கு ரயில்வே மண்டலத்தில் இருப்புப் பாதை போலீஸாா் பற்றாக்குறை உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே, ரயில் நிலையம், ரயில்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் போதிய இருப்புப் பாதை போலீஸாரை நியமிக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.