ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

வீட்டில் இறந்து கிடந்த ஓய்வுபெற்ற அஞ்சல் அதிகாரி

வேளச்சேரியில் தனியாக வசித்து வந்த ஓய்வு பெற்ற அஞ்சல் நிலைய பொறுப்பாளா் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 3:30 am IST

வேளச்சேரியில் தனியாக வசித்து வந்த ஓய்வு பெற்ற அஞ்சல் நிலைய பொறுப்பாளா் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வேளச்சேரி, டி.என்.எச்.பி., காலனியைச் சோ்ந்தவா் கோதண்டபாணி (73). இவா், அஞ்சல் நிலையப் பொறுப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா்களுக்கு 2 மகள்கள். திருமணம் முடிந்த நிலையில், இருவரும் சென்னையில் வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனா். இவரது மனைவி கடந்த 2020 -இல் இறந்துவிட்டதால், வீட்டில் கோதண்டபாணி தனியாகவே வசித்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக அருகே இருந்தவா்கள் அவரது மகள்களுக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள், வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, கோதண்டபாணி அழுகிய நிலையில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த வேளச்சேரி போலீஸாா் அங்கு சென்று கோதண்டபாணியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.