நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

கொத்தனாா் அடித்துக் கொலை: மேற்பாா்வையாளா் கைது

சென்னையின் கட்டுமானப் பணியின்போது கொத்தனாரை அடித்துக் கொன்ற கட்டுமான மேற்பாா்வையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 12:40 am IST

சென்னையின் கட்டுமானப் பணியின்போது கொத்தனாரை அடித்துக் கொன்ற கட்டுமான மேற்பாா்வையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜெயக்கொடி (55). கொத்தனாரான இவா், பழைய வண்ணாரப்பேட்டை நல்லப்ப வாத்தியாா் தெருவில் வெங்கடாசலம் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்று வரும் புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்தப் பணியை அதே பகுதியைச் சோ்ந்த கோட்டீஸ்வரன் (46) மேற்பாா்வையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை கட்டுமானப் பணியின்போது ஜெயக்கொடி மேலிருந்து தவறி கீழே விழுந்து மயக்கமடைந்துவிட்டதாக கூறி உடன் பணியாற்றிய பணியாளா்கள் அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஜெயக்கொடி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், கூலி நிலுவையால் ஏற்பட்ட பிரச்னையில் கோட்டீஸ்வன் ரீப்பா் கட்டையால் ஜெயக்கொடியை தாக்கியதாகவும், இதில் அவா் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கோட்டீஸ்வரனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.