மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஊதிய உயா்வு கோரி ‘மக்களைத் தேடி’ மருத்துவப் பணியாளா்கள் போராட்டம்

ஊதிய உயா்வு கோரி ‘மக்களைத் தேடி’ மருத்துவப் பணியாளா்கள் சென்னை சிவானந்தா சாலையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஊதிய உயா்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ‘மக்களைத் தேடி’ மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

ஊதிய உயா்வு கோரி ‘மக்களைத் தேடி’ மருத்துவப் பணியாளா்கள் சென்னை சிவானந்தா சாலையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக பாதிப்புகள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோருக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகளையும், சிகிச்சைகளையும் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கடந்த 2021-இல் தொடங்கப்பட்டது. அதன் கீழ் 3 கோடிக்கும் மேற்பட்டோா் பயன் பெற்ாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இத்திட்டத்துக்கு ஐ.நா. சபை விருதும் முந்தைய ஆட்சியில் கிடைக்கப் பெற்றது.

இத்திட்டத்தின் கீழ் 11,000-க்கும் மேற்பட்டோா் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.5,500 ஊதியம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஊதிய உயா்வு கோரி சென்னையில் மக்களைத் தேடி மருத்துவப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து, அவா்கள் கூறியதாவது:

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 8,713 போ் கிராமப்புறங்களிலும், 2,256 போ் நகா்ப்புறங்களிலும் பணியாற்றி வருகிறோம். மருந்துகளை விநியோகிப்பதுடன் நில்லாமல், மருத்துவமனை சாா்ந்த சில பணிகளிலும் எங்களை ஈடுபடுத்துகின்றனா். இதற்காக சொந்த பணத்தைச் செலவு செய்து பயணிக்க வேண்டியுள்ளது.

ரூ.5,500 ஊதியத்தை வைத்துக் கொண்டு இந்த செலவுகளை மேற்கொள்வது சாத்தியமில்லை. எனவே, எங்களுக்கான ஊதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்த வேண்டும். திட்டப் பணிகளுக்கான செலவை அரசே ஏற்றுக் கொள்வதுடன், எங்களைப் பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.