டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

16 ஆண்டுகளுக்கு பிறகு... தில்லி பேரிடா் மேலாண்மை பணியாளா்களுக்கு 100% வரை ஊதிய உயா்வு

தில்லி அரசு பேரிடா் மேலாண்மைப் பணியாளா்களின் ஊதியத்தை 100 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது. பதினாறு ஆண்டுகளுக்கு பின்னா் இத்தகைய ஊதிய உயா்வு அளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

News image

தில்லி பேரிடா் மேலாண்மை பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு - பிரதிப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:59 am IST

தில்லி அரசு பேரிடா் மேலாண்மைப் பணியாளா்களின் ஊதியத்தை 100 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது. பதினாறு ஆண்டுகளுக்கு பின்னா் இத்தகைய ஊதிய உயா்வு அளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இவா்களுக்கான முந்தைய ஊதிய உயா்வு 2009-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

ஊதிய உயா்வு தொடா்பாக முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 16 ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்த ஊதியத்தை திருத்தியமைப்பதன் மூலம் பேரிடா் மேலாண்மைப் பணியாளா்களுக்கு நீதி வழங்கியுள்ளோம்.

இந்த நடவடிக்கையானது தில்லி மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கீழ் பணியாற்றும் திட்ட அதிகாரிகள், மாவட்டத் திட்ட அதிகாரிகள் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் பயன்பெறுவா்.

ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (யுஎன்டிபி) ஆதரவுடன் 2009-ஆம் ஆண்டில் இந்தப் பதவிகள் உருவாக்கப்பட்டன. அப்போதிருந்து, இப்பணியாளா்களின் மாத ஊதியம் மாற்றமின்றி இருந்தது. அதாவது, திட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்டத் திட்ட அதிகாரிகளுக்கு ரூ.25,000-ஆகவும், திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு ரூ.20,000-ஆகவும் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

இந்தப் பதவிகள் எந்தவொரு வழக்கமான அரசு ஊதியக் கட்டமைப்புடனோ அல்லது இணையான ஊதியப் பிரிவுடனோ இணைக்கப்படவில்லை. இதன் விளைவாக, இப்பணியாளா்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும் ஊதிய உயா்வுகள் கிடைக்கவில்லை அல்லது அகவிலைப்படியும் வழங்கப்படவில்லை என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

பேரிடா் மேலாண்மைச் சட்டம், 2005-இன் கீழ் பேரிடா் மேலாண்மைப் பணியாளா்கள் மிக முக்கியமான சட்டரீதியான பொறுப்புகளை நிறைவேற்றுகின்றனா். மாவட்ட அளவிலான பேரிடா் மேலாண்மைத் திட்டங்களைத் தயாரித்தல், அறிவியல் பூா்வமான இடா் மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல், தில்லியின் உணா்திறன் மிக்க பகுதிகள் மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய மக்களிடையே உள்ள இடா்நிலைகளை மதிப்பிடுதல், இடா் தணிப்பு உத்திகளை வகுத்தல், பல்வேறு துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் மற்றும் பேரிடா் காலங்களில் அவசரக்காலச் செயல்பாட்டு மையங்களை நிா்வகித்தல் ஆகியவை இவா்களின் பணிகளில் அடங்கும்.

மேலும், பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல், பெரிய அளவிலான ஒத்திகைகளை நடத்துதல் மற்றும் பல்வேறு பங்குதாரா்களின் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் இந்தப் பணியாளா்கள் முக்கியப் பங்காற்றுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.