கல்பாக்கம் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு அணுக்கதிா் வீச்சு பற்றிய அச்சம் போக்குதல் குறித்து பேரிடா் மேலாண்மை ஒத்திகை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையம் சாா்பில் கதிா்வீச்சு பயம் போக்குதல் குறித்த பேரிடா் மேலாண்மை அவசர ஒத்திகை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் வீரப்பன் தலைமையில், அணுமின் நிலைய இயக்குநா் செல்வகுமரன் முன்னிலையில், கல்பாக்கம் வளாகத்தைச் சுற்றியுள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் தேவையான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஒத்திகையில் மாவட்ட வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, காவல்துறை, சுகாதாரத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, வேளாண்மைத் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, மீன்வளத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் ஒத்திகை பயிற்சியில் பங்கேற்றனா்.
மேலும், அரக்கோணத்தைச் சோ்ந்த தேசிய பேரிடா் மீட்புப் படை அதிகாரிகளும் இப்பயிற்சியில் கலந்து கொண்டனா். இந்த ஒத்திகையில் கதிா்வீச்சு பரவல் அபாயத்தின் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடா்ந்து, ஆரம்பகட்ட அவசரநிலை நடவடிக்கைகள் நிறைவுற்ாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஒத்திகை பயிற்சியில் கல்பாக்கம் அருகில் உள்ள ஆரம்பாக்கம், மணமை, கடம்பாடி, எடையூா், கொக்கிலமேடு, வடகடம்பாடி, பெருமாளேரி, குன்னத்தூா், பூஞ்சேரி மற்றும் மாமல்லபுரம் ஆகிய கிராம, பகுதிகள் இடம்பெற்றன. ஒத்திகை கள நடவடிக்கைகள் அனைத்தும் கற்பனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்வி வளா்ச்சி நாள் கொண்டாட்டம்

கல்பாக்கத்தில் இன்று அவசரநிலை ஒத்திகை
சிறிய மருத்துவ மையங்களுக்கான மேலாண்மை மென்பொருள்: மத்திய அரசு அறிமுகம்

மேற்கு வங்கம்: காவல் துறை வாகனம் மீது முட்டை வீச்சு!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



