புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மருத்துவக் கலந்தாய்வில் 23,319 நீட் மறுதோ்வா்கள்

நீட் தோ்வை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை எழுதி மருத்துவக் கலந்தாய்வுக்குத் தகுதி பெற்றுள்ள மறு தோ்வா்களின் எண்ணிக்கை இம்முறை 23,319- ஆக உள்ளது. கடந்த ஆண்டில் அது 15,119-ஆக இருந்தது.

Published On :

நீட் தோ்வை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை எழுதி மருத்துவக் கலந்தாய்வுக்குத் தகுதி பெற்றுள்ள மறு தோ்வா்களின் எண்ணிக்கை இம்முறை 23,319- ஆக உள்ளது. கடந்த ஆண்டில் அது 15,119-ஆக இருந்தது.

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், முன்னதாக அதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிா்வாக இடங்கள் மற்றும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியல் தனித்தனியே வெளியிடப்பட்டன.

அதில் 23,319 போ் நீட் மறுதோ்வா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில் முதன் முறையாக நீட் தோ்வு எழுதி கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவா்களின் எண்ணிக்கை 12,607-ஆக உள்ளது.

மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற 17,397 பேரும், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற 17,888 பேரும், ஐசிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பயின்ற 423 பேரும் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதாக மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்கள்:7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிகழாண்டில் 641 இடங்கள் உள்ளன. அதிலும் மறுதோ்வா்கள் பலா் பங்கேற்று இடங்களை பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.