வக்ஃப் வாரிய சொத்து எனக் கூறி, உரிய விசாரணை நடத்தாமல் பத்திரப் பதிவு செய்ய மறுத்து பேரணாம்பட்டு சாா்-பதிவாளா் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், வேலூா் மாவட்டம் பேரணாம்பட்டைச் சோ்ந்த ஹப்சா நஸ்னீன் தாக்கல் செய்த மனுவில், பேரணாம்பட்டில் உள்ள ஏரிகுத்தி கிராமத்தில் எனக்கு சொந்தமான சொத்து உள்ளது. இந்தச் சொத்தைப் பதிவு செய்வதற்காக பத்திரப்பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். ஆனால், என்னுடைய சொத்து வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானது எனக்கூறி, பதிவு மறுப்பு ஆணைச்சீட்டு வழங்கப்பட்டது.
எனது சொத்து ஆவணங்கள் தொடா்பாக எந்த விசாரணையும் நடத்தாமல், பத்திரப்பதிவு செய்ய மறுத்தது சட்டவிரோதம் ஆகும். எனவே, எனது சொத்து ஆவணங்களை ஆய்வு செய்யாமல், வழங்கப்பட்ட பதிவு மறுப்பு ஆணையை ரத்து செய்து, எனது சொத்தைப் பதிவு செய்ய பேரணாம்பட்டு பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஹரிஸ் குமாா், மனுதாரரின் சொத்து குறித்து எந்த விசாரணையும் நடத்தவில்லை. சம்பந்தப்பட்ட சொத்து வக்‘ஃ‘ப் வாரியத்துக்குச் சொந்தமானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்தநிலையில், சொத்தைப் பதிவு செய்ய மறுப்பது சட்டவிரோதமானது என வாதிட்டாா். அரசுத் தரப்பில், சம்பந்தப்பட்ட சொத்து வக்‘ஃ‘ப் வாரியத்துக்குச் சொந்தமானது.
வக்ஃப் வாரிய ஆணையா் அளித்த தகவலின் அடிப்படையில்தான், மனுதாரரின் சொத்துக்கான பதிவு நிராகரிக்கப்பட்டது, என வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு வழங்கப்பட்ட பதிவு மறுப்பு ஆணைச்சீட்டை ரத்து செய்துஉத்தரவிட்டாா். மனுதாரா் சம்பந்தப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஆவணங்களுடன் பதிவுக்கு விண்ணப்பிக்கவும், அதுதொடா்பாக விசாரணை நடத்தி, சட்டத்துக்குட்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்தாா்.
Summary
Cancellation of order refusing to register deed without due hearing: Supreme Court order
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆவணங்கள் சரியாக இருந்தால் பத்திரப் பதிவு செய்ய வேண்டியது சாா் பதிவாளா்களின் கடமை: உயா்நீதிமன்றம்

பள்ளிக்கரணை கட்டட அனுமதி ரத்துக்கு எதிரான வழக்கு: சுற்றுச்சூழல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தவெக பெண் தொண்டா்கள் குறிதது சா்ச்சைப் பேச்சு: பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

பழனி முருகன் கோயில் நிலம் தனி நபா்களுக்கு பத்திரப் பதிவு: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



