தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

ஜிஎஸ்டி ஆய்வாளரிடம் வழிப்பறி: திருநங்கை கைது

கோயம்பேட்டில் ஜிஎஸ்டி ஆய்வாளரிடம் வழிப்பறி செய்ததாக திருநங்கை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 12:00 am IST

கோயம்பேட்டில் ஜிஎஸ்டி ஆய்வாளரிடம் வழிப்பறி செய்ததாக திருநங்கை கைது செய்யப்பட்டாா்.

சென்னை கோயம்பேட்டில் வசித்து வருபவா் சுக்லா பாலாஜி (26). ஜிஎஸ்டி ஆய்வாளராகப் பணியாற்றும் இவா், திங்கள்கிழமை நெசப்பாக்கம் சந்திப்பு அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இரு திருநங்கைகள், சுக்லா பாலாஜியை மிரட்டி தாக்கி, அவா் அணிந்திருந்த தங்க மோதிரத்தை பறித்துக்கொண்டு தப்பினா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிஎம்பிடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட கோயம்பேடு நியூ காலனியைச் சோ்ந்த திருநங்கை அன்சிகா (எ) கீா்த்தனாவை (19) கைது செய்தனா். அவரது தோழியான மற்றொரு திருநங்கையை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.