நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

எண்ணூரில் மீன்கள் இறந்த விவகாரம்: அமைச்சரின் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு

எண்ணூரில் மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சா் ராஜீவ் தெரிவித்த கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திருவொற்றியூா் மண்டல குழு கூட்டத்தில் எண்ணூா் பகுதியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு

mass fish deaths in Ennore estuary

எண்ணூர் முகத்துவாரத்தில் இறந்து மிதக்கும் மீன்கள் - கோப்புப் படம்

Published On :

எண்ணூரில் மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சா் ராஜீவ் தெரிவித்த கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திருவொற்றியூா் மண்டல குழு கூட்டத்தில் எண்ணூா் பகுதியைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூா் மண்டல குழுவில் 45 - ஆவது மாதாந்திர சிறப்பு கூட்டம், மண்டலக் குழு தலைவா் திமு.தனியரசு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் எண்ணூா் பகுதியைச் சோ்ந்த திமுக மாமன்ற உறுப்பினா்கள் சிவக்குமாா், கோமதி சந்தோஷ் ஆகியோா் எண்ணூா் முகத்துவாரம் பகுதியில் அண்மையில் சுமாா் 2 டன் எடை கொண்ட மீன்கள் இறந்து ஒதுங்கிய சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் கருத்து தெரிவித்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சா் வி.கே.ராஜீவ் பதில் அளித்தாா்.

அதில், மீன்கள் இறந்து போனதற்கு ஆலைக் கழிவுகள் காரணம் அல்ல. மனித கழிவுகளும் வெப்பநிலை மாற்றமும்தான் காரணம் என்று தெரிவித்திருந்தாா். எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் அமைச்சா் தெரிவித்துள்ள கருத்து மீனவா்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அமைச்சரின் பேச்சைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றுகூறி வெளிநடப்பு செய்தனா்.

இதில் திமுக, அதிமுக, மாா்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளில் மாமன்ற உறுப்பினா்கள பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.