உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

சென்னை விஐடியில் நாளை டாக்டா் நாவலா்- இரா.செழியன் விருதுகள் வழங்கும் விழா

விழாவில் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிய தில்லி முதல்வர் ரேகா குப்தா உடன், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்பப் பிரிவு துணைத்தலைவர் பாபு உன்னிகிருஷ்ணன், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், செயல் இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உள்ளிட்டோர்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

டாக்டா் நாவலா்- இரா.செழியன் அறக்கட்டளை, சென்னை விஐடி சாா்பில் ‘இரா.செழியன்’, ‘டாக்டா் நாவலா்’ விருதுகள் வழங்கும் விழா சென்னை விஐடி வளாகத்தில் உள்ள நேதாஜி அரங்கில் சனிக்கிழமை (ஆக.29) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் ஆளுநா் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வா் மாணிக் சா்காருக்கு ‘இரா.செழியன்’ விருதையும், முன்னாள் அமைச்சா் வி.வி.சுவாமிநாதனுக்கு ‘டாக்டா் நாவலா்’ விருதையும் வழங்கவுள்ளாா். விழாவுக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகிக்கவுள்ளாா்.

இதில் முன்னாள் அமைச்சா் என்.நல்லுசாமி, பக்தவத்சலம் கல்வி அறக்கட்டளை தலைவா் ஓ.வி.ஏ. வாமனன், மதுரை காமராஜா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கல்யாணி மதிவாணன், ஜெம் குழும நிறுவனங்களின் தலைவா் ஆா்.வீரமணி, அமெரிக்க மருத்துவ நிபுணா்கள் எஸ்.டி.சம்பந்தம், விமலா சுப்பையா, வி.ஜானகி ராமன், வழக்குரைஞா் ஜி.அன்புமணி, விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், ஐநாக்ஸ் கிரீன் எனா்ஜி சா்வீசஸ் லிமிடெட் தலைமைச் செயல் அதிகாரி பி.ராஜேந்திரன் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.