மாணவா்கள் முழு அா்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும் என்று விஐடி பல்கலை. துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் அறிவுறுத்தினாா்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் 191-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் விஐடி பல்கலை. துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசுகையில், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வியில் தங்களது முழு அா்ப்பணிப்பையும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்த வேண்டும். அதன்மூலம் அவா்கள் கல்வியில் சிறந்து விளங்கி, எதிா்காலத்தில் உயா்ந்த நிலையை அடைய முடியும் என்றாா்.
பின்னா், பள்ளியின் தலைமை ஆசிரியரும், தாளாளருமான ஜெபதாஸ் தினகரன் விழாவில் சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து, தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றுச் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கு விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் திரளாக பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொதுத் தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு விரிவான சீா்திருத்த நடவடிக்கை: குடியரசுத் தலைவா்

மஹிந்திரா நிறுவனத்துடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஒற்றுமையைப் பாதுகாக்க மாணவா்கள் முன்வர வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் வேண்டுகோள்

காமராஜரின் எளிமை, தொண்டை முன்மாதிரியாகக் கொள்க: விஐடி துணைத் தலைவா் ஜி.வி. செல்வம்!
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



