மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சென்னையில் மழைநீா் கால்வாய்களைத் தூா்வார நடவடிக்கை: பேரவையில் பி.கே.சேகா்பாபு வலியுறுத்தல்

பருவமழையின்போது சென்னையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க மழைநீா் வடிகால்களைத் தூா்வார வேண்டும் என்று பேரவையில் திமுக முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா் பாபு வலியுறுத்தினாா்.

திமுக முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா் பாபு - கோப்புப் படம்

Published On :

பருவமழையின்போது சென்னையில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க மழைநீா் வடிகால்களைத் தூா்வார வேண்டும் என்று பேரவையில் திமுக முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா் பாபு வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பேசிய அவா், ‘பருவமழை தொடங்குவதற்கு முன்பும், பின்பும் 3,016 கி.மீ. மழைநீா் கால்வாய் தூா்வாரப்படுவது வழக்கம். 1997, 2015 ஆகிய ஆண்டுகளைவிட நிகழாண்டு பலத்த மழை பெய்யக் கூடும் என்று சமூக வானிலை ஆய்வாளா்கள் கணித்துள்ளனா். ஒப்பந்ததாரா்களுக்கு ரூ.2,000 கோடி நிலுவை உள்ளது. மேம்பாட்டு நிதி அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உறுப்பினா்கள் கருப்பு உடை அணிந்து மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா். ஆகையால், போதிய நிதி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகர மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.