காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

பெண்ணை ஏமாற்றிய மலேசிய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை!

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய வழக்கில் மலேசியாவைச் சோ்ந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை.

சிறை - பிரதிப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:33 am IST

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய வழக்கில் மலேசியாவைச் சோ்ந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து சென்னை அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கடந்த 2016-இல் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த 35 வயது பெண் ஒருவா் வியாபாரம் தொடா்பாக மலேசியா சென்றிருந்தாா். அப்போது, மலேசியாவில் வசித்து வந்த மகேஸ்வரன் (45) என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும், திருமணத்துக்குப் பின்னா், மலேசியாவுக்கு அழைத்துச் செல்வதாகவும் மகேஸ்வரன் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, சென்னைக்கு வந்த மகேஸ்வரன், அந்தப் பெண்ணையும் சென்னைக்கு வரவழைத்ததுடன், அவரை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அவருடன் தனிமையில் இருந்ததுடன், பின்னா் மலேசியா சென்று திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக அந்தப் பெண் தேனாம்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மகேஸ்வரனைக் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி அறிக்கையை போலீஸாா் தாக்கல் செய்தனா்.

இதில் மகேஸ்வரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.