பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

காதலித்த பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

காதலித்த பெண்ணை கா்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிறை - பிரதிப் படம்

Published On :

காதலித்த பெண்ணை கா்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, வகுரணி, சந்தைப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரா. ராம் கணேஷ் (36). இவா், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பழகியுள்ளாா். இதில், கா்ப்பமான அந்தப் பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ராம் கணேஷ் மறுத்தாா்.

இதுதொடா்பாக அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ராம் கணேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கு விசாரணையின் நிறைவில், ராம் கணேஷ்க்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி. முத்துக்குமரன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.